கோவையில் திடீர் பன்றி காய்ச்சலுக்கு இருவர் பலி..

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் பன்றி காய்ச்சலுக்கு பலர் பலியாகி வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் குணமாகாதவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த போத்தனூரை சேர்ந்த வேலாயுதம் (65), நிலம்பூரை சேர்ந்த பழனிசாமி (61) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும், 21 பேர், டெங்குவிற்கு 4 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 60 பேர் என 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதார சீர்கெட்டால் பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வப்போது, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர், கீழை நியூஸ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!