தர்மபுரி மாவாட்டம் மாரண்டஅள்ளியில் கிணற்றில் மர்மான முறையில் இறந்து கிடந்த வாலிபர்..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றில் டிராவல்ஸ் ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  இன்று (28/05/2019) காலை பேரூராட்சி ஊழியர் மணிகன்டன் என்பவர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற சென்றார். அப்போது மின்மோட்டாரை துவக்கி   விட்டு கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என 50அடி ஆழ கிணற்றை எட்டி பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் வாலிபர் சடலம் ஒன்று உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து பாலக்கோடு தீயனைப்பு துறைக்கும் மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்க்கும் தகவல் அளித்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த பாலக்கோடு தீயனைப்பு துறையினர் கயிறு கட்டி சடலத்தை மேலே எடுத்தனர். இறந்தவர் மாரண்டஅள்ளி அருகே உள்ள சி.எம் புதூரை சேர்ந்த பொம்மன் மகன் சண்முகம் (40) என்பதும், இவர் கார் டிரைவரர் என்பதும் தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 14ஆண்டுகள் ஆகிறது 14வயதில் ஒரு பெண்ணும், 12வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று மாலை வீட்டில் இருந்து மாரண்டஅள்ளி செல்வதாக சொல்லிவிட்டு வந்தவர் கிணற்றில் விழுந்து இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவருக்கு குடிபழக்கம் உள்ளது, மேலும் கிணற்றுக்கு அருகில் மதுபாட்டிலும் இவருடைய காலணியும் காணப்பட்டது குடித்து விட்டு நிலைதடுமாறி கிணற்றில் விழுந்தாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என மாரண்டஅள்ளி போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!