போதை போலீஸ்காரர் சஸ்பெண்ட்..

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய காவலராக போஸ் (40) பணியாற்றி வருகிறார். இவர் இன்று குடிபோதையில் சக போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். ஆவேசமடைந்த அவர் காவல் நிலையத்தில் இருந்த வயர்லெஸ் கருவியை உடைத்தார்.

இது குறித்து மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா காவலர் போஸை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். போஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!