மதுரை கீழக்குயில்குடி ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா மதுரை மாவட்ட தலைவர் சபரிநாதன் தலைமையிலும், மாநிலச் செயலாளர் மாரிச்செல்வம்,மாநிலத் தலைவர் மகேந்திர குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் துரைப்பாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் கொடி ஏற்றியும் வைத்து குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் பிரபு, மாநில பொருளாளர் கார்த்திகேயன்,நில அளவை பதிவேடுகள் துறை மதுரை மண்டல துணை இயக்குனர் கணேசன் உட்பட தமிழ்நாடு அரசு அலுவலர்கள் நில அளவை துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் ,இம்முப்பெரும் விழாவில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, அவைகள், நவீன நில அளவை குறித்து பொதுமக்களுக்கு தமிழ்நாடு முழுவதும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், களப்பணியில் தோய்வு ஏற்படாதவாறு சம்பளத்தோடு கூடிய மாலை நேர கல்லூரிகளிலோ அல்லது வார விடுமுறை தினங்களில் உள்ள கல்லூரியிலோ சேர்ந்து படித்து பயனடையும் வகையில் அந்த முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும், நவீன நில அளவை கருவிகளைக் கொண்டு அனைத்து நில அளவை பணியாளர்களுக்கும் அளவை செய்வதற்கு ஏற்றார் போல அனைவருக்கும் நவீன நில அளவை கருவிகளும் அதனோடு தொடர்புடைய தரம் மேம்படுத்தப்பட்ட இன்டர்நெட் ஒரு கூடிய மனிதனை நிகழ் வழங்க வேண்டும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

You must be logged in to post a comment.