தென்காசி மாவட்டம் சுரண்டையில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்களால் பயணிகளும் ஒட்டுனர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தென்காசி மாவட்டத்தில் சுரண்டை மிக முக்கியமான வர்த்தக நகரமாக உள்ளது. சுரண்டையிலிருந்தும் சுரண்டை வழியாகவும் 90 அரசு மற்றும் தனியார் பஸ்கள் 400 தடவைகள் வந்து செல்கின்றன. இவற்றின் மூலம் தினமும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் வியாபாரிகள் என சுமார் 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.

ஆனால் இப்பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதியில் சுகாதார வளாகம் இருக்கும் இடத்தில் அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்க இடம் இல்லாமல், தனியார் நான்கு சக்கர வாகனங்கள், லோடு வண்டிகள் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் பேருந்துகள் நிறுத்த முடியாத நிலை உள்ளதுடன், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் சுகாதார வளாகம் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் சுரண்டை பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் தனியார் வாகனங்கள் விடுவதை தடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.