தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம் நெசவாளர் தெரு சமுதாய நலக்கூடத்தில் ஒய்வு பெற்ற அலுவலர் செலினா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சமுத்திரம் வரவேற்றார். செயலர் அய்யங்கண்ணு முந்தைய கூட்டத்தின் அறிக்கை வாசித்தார். பொன்ராஜ் பாண்டியன் சங்க நடவடிக்கை மற்றும் டிசம்பர் 5 போராட்ட முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். ரூஸ்வெல்ட் கருத்துரை வழங்கினார். ஜெயலட்சுமி உடல் நலம் பேணுதல் பற்றி எடுத்துரைத்தார். நிகழ்வில் ஞானையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமுத்திரம் நன்றி கூறினார். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.