யானை பாகருக்கு உதவிக்கரம் நீட்டிய கடையநல்லூர் எம்எல்ஏ..

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மக்தூம் ஞானியார் தர்ஹாவில் இருந்த ஜெய்னி என்ற யானை சமீபத்தில் சான்றிதழ் குறைபாடு காரணமாக வனத்துறையால் மீட்கப்பட்டு காப்பகத்தில் உள்ளது. யானை பாகர் பாதுஷா என்பவர் யானை இல்லாத காரணத்தால், தான் மிகுந்த வறுமையில் உள்ளதாக கடையநல்லூர் எம்எல்ஏவிடம் மனு அளித்தார். அதை தொடர்ந்து, கடையநல்லூர் எம்எல்ஏ C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து யானை பாகர் பாதுஷாவிற்கு அரிசி, மசாலா பொருட்கள் மற்றும் நிதியுதவி அளித்து, யானையை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் யானை மீட்கப்படும் என்பதாக தெரிவித்தார். இந்நிகழ்வின் போது நகர கழக செயலாளர் எம்.கே.முருகன், முன்னாள் நகர கழக செயலாளர் கிட்டுராஜா உள்ளிட்ட கடையநல்லூர் நகர அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!