தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை தென்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..
இதுவே தமிழ்நாட்டில் குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் இந்த வெப்ப அலை தாக்கம் அதிகரித்திருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. இதன்படி ஏப்ரல் 22 முதல் 26 வரையிலான 5 தினங்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இயல்பைவிட ஓரிரு டிகிரி வெப்பநிலை கூடுதலாக தென்படும்.
அதிகபட்ச வெப்பநிலை என்பது, வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் குறிப்பாக சமவெளி பகுதிகளில் வெப்ப அலை அதிகரித்து காணப்படும். இந்த இடங்களில் வெப்ப நிலையானது 39 முதல் 41 வரையிலான டிகிரி செல்ஷியஸ் என்றளவில் உயர்ந்து காணப்படும். இந்த அறிவிப்பில் இடம்பெறாத இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் 34 – 38 டிகிரி செல்ஷியஸில் வெப்பநிலை உயர்ந்து காணப்படும்.
வெப்ப அலை வீசுவது, காற்றில் ஈரப்பதம் வெகுவாய் குறைவது, வெயிலின் உக்கிரம் ஆகியவை, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயுற்றுவர்களை பாதிக்கக்கூடியதாகும். எனவே நண்பகல் நேரத்தில் இவர்கள், வெயிலில் அலைவதை தவிர்ப்பது நல்லது. ஏனையோரும், கோடை வெயிலுக்கு உகந்த ஆடைகள் முதல் உணவு ரகங்கள் வரை மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது, வெப்ப அலை வீச்சியின் உக்கிரத்தை தணிக்க உதவக்கூடும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









