3வது முறை விண்வெளி பயணத்திற்கு தயார் ஆகும் சுனிதா வில்லியம்ஸ்! குவியும் வாழ்த்துக்கள்..

3வது முறை விண்வெளி பயணத்திற்கு தயார் ஆகும் சுனிதா வில்லியம்ஸ்! குவியும் வாழ்த்துக்கள்..

புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது 3வது விண்வெளி பயணத்திற்கு தயாராகி வருகிறார். நாசாவின் புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.

இவர் நாசாவின் போயிங்கின் ஸ்டார்லைனர் திட்டத்தில் க்ரூ ப்ளைட் டெஸ்ட் மிஷனின் பைலட்டாக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த ராக்கெட்டை புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் போர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதளம் 41ல் இருந்து மே 6ம் தேதி இரவு 10:34 மணிக்கு ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணி சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார். சுனிதா வில்லியம்ஸ் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளார். ஏற்கனவே 2 முறை சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு செய்த அனுபவம் கொண்டவர். சுனிதாவுக்கு சமூகவலைதளங்களில் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!