உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் கோடை விடுமுறையில் ஆர்வத்துடன் கிடா முட்டு விடும் இளைஞர்கள்…

தமிழகம் முழுவதும் இளைஞர்கள் கோடை காலத்தை கொண்டாடி வரும் நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குப்பணம்பட்டி கிராமம். இஅங்கு கோடைகால விடுமுறையில் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ளும் வகையில் தங்களது ஊரில் உள்ள கிடாய்களை அனைத்தையும் காட்டுபகுதியில் இரண்டு இரண்டு கிடாய்களாக முட்டு விட்டு மகிழ்ச்சியடைகின்றனர்.

இதில் பங்கேற்று வெற்றிபெறும் கிடாய்களுக்கு 1000 மற்றும் 500 ரூபாய் ரொக்க பணம் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த குப்பணம்பட்டி கிராமத்தை பொறுத்தவரை பள்ளி, கல்லுரி மாணவர்கள் கோடை காலத்தை கொண்டாடும் வகையில் இது போன்று கிடாய் முட்டு விட்டு இளைஞர்கள் சந்தோசப்பட்டு பொழுதை கழித்து வருகின்றனர். இது போன்று சாதாரனமாக கிடாய் முட்டு விடுவதால் கிடாய்களுக்கு ஒரு அனுபவமாக இருப்பதாகவும் இளைஞர்கள் கூறுகின்றனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!