சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி உற்சவ முளைக்கொட்டு பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இவ்விழா ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு காமாட்சி அபிராமி சரஸ்வதி சந்தான லட்சுமி பகவதி அம்மன் மீனாட்சி வைஷ்ணவி போன்ற சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் தீபாரனையும் நடைபெற்று வருகிறது.
இன்று காலை சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது. கன்னிகா பூஜை தொடர்ந்து சுமங்கலி பெண்களுக்கு பாத பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று திவாரணை காண்பிக்கப்பட்டது.
சுமங்கலி பூஜைகள் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு குங்குமம் வளையல்கள் போன்ற பொருள்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
You must be logged in to post a comment.