தேர்வில் மதிப்பெண் குறைவு, மாணவி தீக்குளித்து தற்கொலை..

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கே.ஆர்.பட்டிணம். இந்த ஊரைச்சேர்ந்தவர் தர்மராஜ் மகள் தர்மபிரியங்கா(வயது17). பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தாராம். இதனால் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக அவரின் பெற்றோர் உத்தரகோசமங்கை அருகே உள்ள ஆலங்குளத்திற்கு தாத்தாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் தாத்தாவின் வீட்டில் இருந்த தர்மபிரியங்கா மனம் உடைந்து உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் உத்தரகோசமங்கை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!