உயரழுத்த மின் டவர் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி..

இராமநாதபுரம் பரமக்குடி காக்கா தோப்பு அருகே முருகன் 34, என்ற இளைஞர் மது போதையில் உயரழுத்த மின் டவர் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபரம் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரை சமாதானப் படுத்த முயற்சித்தனர்.  ஆனால்  ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் போதையில் இருந்த  வாலிபர் கீழே இறங்கி வர மறுப்பு.

இந்த வாலிபர் தமிழக  அரசு சார்பில் மானிய விலையில் வழங்மும் ஸ்கூட்டி கேட்டு அடம்பிடித்ததாக அறியப்படுகிறது.  பல மணி  நேரத்திற்கு மேலாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் , காவல் துறையினர் , பரமக்குடி சரக டி.எஸ்.பி சதீஸ்குமார் , மின்சார வாரிய ஊழியர்கள் , பொதுமக்கள் காப்பற்ற முயற்சி செய்து கீழே இறக்கி விடப்பட்டார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!