திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பொதுமக்கள் சார்பில் கட்டபடும் விநாயகர் கோயிலை நகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்ததை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனியில் அம்பலகாரர் தெருவில் பொதுமக்கள் சார்பில் சிறிய விநாயகர் கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. பொது இடத்தில் நகராட்சி அனுமதியின்றி கட்டப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, கோயிலை அகற்ற நகராட்சி ஊழியர்கள் குவிந்தனர்.
இதனையடுத்து கோயிலை சுற்றி பெண்கள் நிற்க, அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகா என்ற பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்மீது போலீசார் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக கோயிலை அகற்றும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர்.


You must be logged in to post a comment.