மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த உச்சப்பட்டி இலங்கை அகதி முகாமில் ஜோன்சன் வயது 26 காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த உச்சப்பட்டி இலங்கை அகதி முகாமில் ஜோன்சன் வயது 26 இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை மூன்று வயதில் உள்ளன மேலும் இவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். ஜோன்சன் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார், இந்நிலையில் நேற்று இரவு இம்முகாமில் மேரி புஷ்பம் என்பவருக்கும் சந்திரபோஸ் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது, இதில் சந்திரபோஸ் தனக்குளம் பகுதியில் உள்ள நண்பர்களை அழைத்து வந்து மேரி புஷ்பம் குடும்பத்தை தாக்கியுள்ளார்.
இதற்கு உடந்தையாக ஜோன்சன் விலகிவிட சென்றபோது சந்திரபோஸ் நண்பர்கள் ஜான்சனை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆஸ்டின் பட்டி காவல்நிலையத்தில் ஜோன்சன் புகார் செய்துள்ளார். ஜான்சன் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காததால் இதில் ஆத்திரமடைந்த ஜோன்சன் உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு கொடுகத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை தீயணைப்புத் துறை உதவியுடன் மீட்க முயற்சித்தனர். மேலும் உயர் அழுத்த மின் கோபுரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் அவருடைய மனைவி ரேணுகா தனது குழந்தையை காட்டி தாங்களும் தற்கொலை செய்வதாக கூறி கெஞ்சினார், பின்னர் ஜான்சன் காவல்துறையினர் தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து இரு சிறைக்கு அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்த பின்னர் கோபுரத்திலிருந்து தீவிர போராட்டத்திற்கு பின் இறக்கப்பட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















