மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம் அம்போலி காட் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற 7 நண்பர்களில் இருவர் 2,000 அடி பள்ளத்தில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சுற்றுலா சென்ற 7 பேரில், இம்ரான் காடி (வயது 26), பிரதாப் ரதோடி (வயது 21) ஆகிய இரண்டு வாலிபர்களும் 2,000 அடி ஆழமுள்ள கவாலே சாத் பாய்ன்ட் பள்ளத்தாக்கின் மேலே உள்ள பாலத்தில் நின்று கொண்டு மது அருந்தினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு போதையினால் நிலைத் தடுமாறி தடுப்புக் சுவருக்கு மேலேறி அதற்கு அப்பால் நின்று கொண்டு விளையாடும் போது சுமார் 2000 அடி பள்ளத்தில் விழுந்தனர். இந்த சம்பவத்தை அந்த பகுதியை சார்ந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். தறபோது அந்த காட்சியை சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சுற்றுலா வந்த மற்ற நண்பர்கள் குடி போதையில் இருந்த நண்பர்களை சாத் பாயின்டில் விட்டு சென்ற பிறகு அதிக நேரமாகியும் அங்கிருந்து திரும்பாததால் சந்தேகம் எற்பட்டு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
உடனே போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அப்பகுதி மக்களின் உதவியோடு 2 இளைஞர்களின் உடல்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அங்கு மழை பெய்துவருவதாலும், பனி மூட்டம் காரணமாகவும் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தோஷமாக சுற்றுலாவை கழிக்க வேண்டிய வேளையில் மதுவினால் ஏற்படும் கோர சம்பவங்கள் ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது. மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில் இது போன்ற செய்திகள் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









