விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் ஞானபண்டிதன் இவரது மகன் ராஜராஜன்(வயது31 )இவர் மதுரை முத்துப்பட்டியில் தனியாக தங்கி ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்.
திருமணம் செய்து வைக்க சொல்லி பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி ராஜராஜன் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் கடந்த வாரம் ராஜராஜனின் சகோதரருக்கு திருமணம் நடைபெற்றது. ராஜராஜனுக்குஇந்த தகவலால் மேலும் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும்.
இந்நிலையில் நேற்று திருப்பரங்குன்றத்தில் உள்ள சரவண பொய்கை குளத்திற்கு வந்த ராஜராஜன் யாரும் இல்லாத நேரத்தில் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ராஜராஜனின் உடலை வீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









