மதுரை அருகே உடல்நலம் குன்றிய ஓய்வு பெற்ற ரயில்வே காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை – உருக்கமான கடிதம் சிக்கியது..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சாலையில் வசித்து வருபவர் மாரி சாமி (வயது 72). இவர் மதுரையில் ரயில்வே துறையில் காவலராக பணியாற்றியவர் மாரிசாமி, கடந்த 2004ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், திருநகர் அருகே அமைதிசோலை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே சளிதொல்லை காரணமாக உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல் காலையில், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் திருநகர் பகுதியிலுள்ள மின்ஏற்றியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஓய்வு பெற்ற காவலர் தூக்கில் தொங்கியதை கண்ட அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர் தற்கொலை செய்யும் முன் ஓய்வு பெற்ற அதிகாரி மாரிசாமி எழுதிய கடிதம் கிடைத்த நிலையில் அதில், தனக்கு உடம்பில் பிரச்சனை மற்றும் உளவியல் ரீதியாக பிரச்சனை எனவும் இந்த முடிவை எடுத்ததாகவும் தன் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் குறிப்பிட்டுளார்.

மேலும், தற்போது கொரோனா இருப்பதனால் தன்னை பார்க்க யாருக்கும் வீட்டிற்கு வர வேண்டாம் எனவும் போனிலே விசாரித்து கொள்ளவும் எனவும் உருக்கமாக எழுதியுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!