கல்லூரியில் படிப்பதற்கு பணம் தர மறுத்ததால் பாலக்கோடு அருகே வினிதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை..
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த முருக்கம்பட்டி சேர்ந்த பெரியசாமி மகள் வினிதா 19 வயது இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் கெமிஸ்டரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள் நேற்று காலை படிப்புக்கு பணம் கட்டுவதற்கு அப்பா பெரியசாமி இடம் பணம் கேட்டுள்ளார் வினிதா அப்பா பெரியசாமி பணம் இல்லை என்று திட்டியதில் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்று உள்ளது இதில் மனமுடைந்த வினிதா நேற்று மாலை 5 மணிக்கு வீட்டின் கூரை மேலே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் பாலக்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
11ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த அமலாபுரம் சேர்ந்த இளங்கோவன் மகள் இளமதி 16 வயது அமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 9ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்ட இளமதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


You must be logged in to post a comment.