மதுரை மேலூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 48). கூலித்தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. வல்ல நாதன்பட்டியில் காதலி மீனாவுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் மீனாவுக்கு இடது காலில் புண் ஏற்பட்டது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் புண் குணமாக வில்லை. காதலி உடல்நலக்குறைவில் அவதிப்படுவதை பார்த்து மனவேதனை அடைந்த அந்தோணி வீட்டில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக அந்தோணியின் சகோதரர் ஜான்போஸ்கோ மேலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









