இராமநாதபுரம் அருகே லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை சாவில் மர்மம் என உறவினர்கள்..

இராமநாதபுரம் அருகே காக்குடியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் சவுந்தர பாண்டி, 45. இவர் தனியாருக்குச் சொந்தமான லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக சவுந்தர பாண்டியிடம் நிர்வாகம் கணக்கு சரி பார்த்தது. சவுந்தர பாண்டி தர பணத்தை நிர்வாகம் கட்டாயப்படுத்தி கால அவகாசம் வழங்கியது. இதனால் மனமுடைந்த சவுந்தர பாண்டி, காருகுடியில் உள்ள கோவிந்தராஜ் என்பவரது தோப்பில் இன்று காலை 5 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி சாந்தி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் கொடுத்தார். இதன் படி இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் போலீசார் சவுந்தர பாண்டி, உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். அவரது சட்டை பையில் இருந்த துண்டு சீட்டில் என் தற்கொலைக்கு நான் வேலை பார்த்த நிறுவன உரிமையாளரே காரணம் என எழுதப்பட்டிருந்தது. இதனடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சவுந்தர பாண்டி சாவில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சவுந்தர பாண்டிக்கு மகாசக்தி 11 (மகள்) விஜய சக்தி 7 (மகன்) உள்ளனர்.

ஆசிரியர்

[email protected]

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!