வாலாந்தரவை மெக்கானிக் இன்ஜினியர் ஐஏஎஸ்., தேர்வில் 327 வது ரேங்க் எடுத்து வெற்றி..

இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஜி.அங்குச்சாமி ( ஸ்ரீரங்கம் காவல் துணை கண்காணிப்பாளர், ஓய்வு) மகன் அஸ்வின் சந்துரு. அண்ணா பல்கலை., யில் பி.இ., மெக்கானிக் முடித்த இவர் ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் 327 வது ரேங்க் பிடித்து தேர்ச்சியடைந்துள்ளார்.

இவர் கடந்த 2 மாதங்களுக்கு வெளியான இந்திய வனப் பணி தேர்வில் தேர்ச்சி அடைந்த வர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை அரசு கலை கல்லூரி அரசியல் விஞ்ஞான துறைத்தலைவர் பி.கனகராஜ் நடத்தும் இலவச பயிற்சி மையத்தில் , அஸ்வின் சந்துரு பயிற்சி பெற்றவர். கோவை பேராசியர் கனகராஜ் கடந்த 12 ஆண்டு களாக நடத்தி வரும் இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற, 88 பேர் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், வருவாய் துறை உயரதிகாரிகளாக பணி நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் சந்துருவின், சகோதரர் நவீன் சந்துரு மயக்கவியல் நிபுணராகவும், மற்றொரு சகோதரர் விக்ராந்த் சந்துரு பி.இ., ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். அஸ்வின் சந்துருவின் பெரியப்பா ஜி.சவுந்தர ராஜன் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மற்றொரு பெரியப்பா ஜி.முனியசாமி தமிழக சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவராக இருந்தார். இவரது சித்தப்பா ஜி.தனபாலன் ராணுவத்தில் பணியாற்றியவர். மற்றொரு சித்தப்பா ஜி.பன்னீர் செல்வம் கனிம வளத்துறை உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில் குக்கிராமத்தில் பிறந்து ஐஏஎஸ் தேர்வில் வென்ற அஸ்வின் சந்துருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!