இராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலை, பரமக்குடி மகளிர் தனிச்சிறைச்சாலை மற்றும் முதுகுளத்தூர் சிறைச்சாலையில் கைதிகள் அறை, சமையல் கூடம், குளியல் அறை, குடிநீர், நூலகம், பார்வையாளர் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு, மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஷ் ஆகியோர் இன்று (03.052024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிறைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை, குற்றங்களுக்கான காரணங்கள், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர்கள் சுவாமிநாதன் (இராமநாதபுரம்), கார்த்திகேயன் (திருவாடானை), சாந்தி (பரமக்குடி), சடையாண்டி (முதுகுளத்தூர்) தலைமை நீதித்துறை நடுவர் கே.கவிதா, இலவச சட்ட உதவி மைய செயலர் கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.




You must be logged in to post a comment.