கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் யுனைடெட் கல்வி குழும அறக்கட்டளை சார்பாக, யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சுமார் ஒரு இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை, மேட்டுப்பாளையம் CITU பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் நம்ம மேட்டுப்பாளையம் தோழர்களிடம் வழங்கினர்.
தற்போது முகாம்களில் தங்கி இருப்பவர்கள்,
மறுகுடியிருப்பு அமர்த்தப்படும்போது தேவைப்படும் பொருட்களை இவர்கள் வாங்கி தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் விஜயா, பேராசிரியை புவனேஸ்வரி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அருண்பிரசாத் மற்றும் மாணவர்கள் ராகுல், சஞ்சய் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கினர்.
You must be logged in to post a comment.