கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் பேருந்து கட்டணம் உயர்வால் கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலையில் மாணவிகள் 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டது பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் பாதிப்புக்குள்ளாயினர் மேலும் சுற்றுலா பயணிகள் விமான மற்றும் ரயில் இவற்றிற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறியது தற்போது அரசு கல்லூரி ஏற்று நடத்துவதால் செமஸ்டர் கட்டணமானது குறைக்கப்பட்டுள்ளது எரிபொருள் மற்றும் உபகரணங்களின் விலை உயர்வினால் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.


You must be logged in to post a comment.