சாம்பவர் வடகரையில் சிந்தனை நாள் பேரணி; போதை பொருள் ஒழிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு..

சாம்பவர் வடகரையில் சிந்தனை நாள் பேரணி; போதை பொருள் ஒழிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு..

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளியில் சாரணர் சாரணியர் இயக்கத்தை தோற்றுவித்த பேடன் பவுலா பிறந்த நாளை முன்னிட்டு சிந்தனை நாள் பேரணி (போதைப் பொருள் ஒழிப்பு) நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பிரபாவதி தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். பேரணி காவல் நிலையத்தில் தொடங்கி மெயின் ரோடு வழியாக சென்று இராமசாமி கோவில் பகுதியில் முடிவடைந்தது.

பேரணியில் சாரணர் சாரணியர்கள் போதைப்பொருள் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மது ஒழிப்பு, பிளாஸ்டிக் பை ஒழிப்பு போன்ற வாசகங்களை முழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினார். முதுகலை ஆசிரியர் சரவணன், உடற்கல்வி இயக்குனர் அருணா, இளஞ்செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் ராஜேஷ், இடைநிலை ஆசிரியர் ராஜரத்தினம், சாரணர் ஆசிரியர் நடராஜன், சாரணியர் ஆசிரியை சத்யா ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!