பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைக்க கடும் எதிர்ப்பு :
திட்டத்தை கைவிடக் கோரி ஏராளமான பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை
ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர் . பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைத்தால் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டம் கிடைக்காது, கிராமப்புற ஊராட்சிக்கு கிடைக்க கூடிய அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும். குடிநீர் வசதி கிடைக்காது, சாலை வசதி மின்விளக்கு போன்றவற்றை செய்து தர மாட்டார்கள், ராமநாதபுரம் நகராட்சியில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை போல தங்களது ஊராட்சியும் சுகாதார சீர்கேட்டால் சீரழியும் நிலைமை ஏற்படும் என்று கூறி தங்களது பேராவூர் ஊராட்சியை ராமநாதபுரம் நகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை குறித்து வலியுறுத்தினர்
You must be logged in to post a comment.