நெல்லை மாவட்டம் ஆலங்குளம் புதியபேருந்து நிலையம் அருகே அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் 08-01-19 காலை நடைபெற்றது.
மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் – தொழிலாளர்கள் விரோத கொள்கையை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் 48 பெண், ஆண் 36 மொத்தம் 84 பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.