கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, கன்னியாகுமரியில் டன் கணக்கில் மீன்கள் தேக்கம் பல கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிப்பு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம் மீன் பிடி துறைமுகங்களை தங்கு தளமாக கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு பிடிக்கப்படும் மீன்களை கேரளாவை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்வது வழக்கம். அத்துடன், சிறிய ரக மீன்களை கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.
இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நேற்று இரண்டு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கேரளாவில் இருந்து வாகன போக்குவரத்து இயக்கப்படாததால் டன் கணக்கில் மீன்கள் தேக்கம் அடைந்துள்ளன.  இதனால் பல கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.  மீன்களை பதப்படுத்துவதும், பாதுகாப்பதும் சிரமம் என்று கூறும் மீனவர்கள், போராட்டம் நீடித்தால் வர்த்தகம் அடியோடு பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!