தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து முகிலன் வெளியிட்ட வீடியோ ஆதாரத்தை ஒருநபர் கமிஷனின் 12வது கட்ட விசாரணையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் அளித்தனர்…

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. தற்போது இந்த விசாரணை கமிஷனின் 12-வது கட்ட விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 11 கட்ட விசாரணையில் பொதுமக்கள், காயம்பட்டோர்,கலவரத்தில் உயிர் இழந்தவர்கள் உறவினர், குடும்பத்தினர் என மொத்தம் 329 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

12- வது கட்ட விசாரணையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான சிலர் கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட கலவரம் திட்டமிட்ட சதி என்பதை நிருபிக்கும் வகையில் வீடியோ ஆதாரத்தை சமூக ஆர்வலர் முகிலன் வெளியிட்டார். அந்த ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை நாங்கள்  விசாரணை கமிஷனில் சமர்ப்பித்தனர்.  முகிலனை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒரு நபர் கமிசனில் புகார் அளித்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!