இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்தி மதுரை வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்ய இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் உத்தரவின் பேரில் திருவாடானை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அச்சோதனையின் போது திருவாடானை தொண்டி ரோட்டில் அச்சங்குடி அருகே நின்ற நானோ காரை சோதனை செய்ய சென்ற போது இருவர் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை விரட்டி பிடித்து விசாரணை நடத்தயதில் 1, 3/4 அடி உயரமுள்ள ஐம்பொன் விநாயகர் சிலை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிலைகளை கைப்பற்றிய காவல்துறையினர் கடத்தல்காரர்களான தங்கபாண்டியன், வெள்ளையாபுரத்தை சேர்ந்த அம்ஜத்கான் செய்யது அப்தாஹிர், ரிஸ்வான் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடத்தபட இருந்த இந்த சிலையின் மதிப்பு சுமார் 3 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலை எங்கு இருந்து எடுக்கப்பட்டது என்ற விவரங்களை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






Well done…
Vry bad of them we should punish them n give them punishment