தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி – சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மேற்காணும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் உள்ள பின்வரும் காலியாகவுள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கணையாக விளங்குவதற்கு 6-ஆம் வகுப்பு, 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சிறுவர், சிறுமியர்களுக்கான மாநில அளவிலான தேர்வு வரும் 11-05-2017 அன்று காலை 8.00 மணிக்கு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ள போட்டிக்கான விபரங்கள் கீழே.
சிறுவர்களுக்கான விளையாட்டு 1. இறகுப் பந்து 2) டேக்வோண்டா 3) குத்துசண்டை 4) ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் 5) டென்னிஸ்.சிறுமியர்களுக்கான விளையாட்டு 1. இறகுப்பந்து 2) மேசைப்பந்து 3) ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் 4) நீச்சல்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் 2017-2018ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை 30.04.2017ஆம் தேதி முதல் இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதிகள் தொடர்பான விவரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கெர்ளளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 11.05.2017 தேர்வு அன்று காலை 8.00 மணிக்குள் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









