மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த பள்ளி மாணவி, கிழக்குத்தெரு முஹம்மது ரிபாய்தீன் மகளார் ஹதிஜத் ரிஃப்தா ரிபாய் முதலிடம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் மேலத் தெரு ஹமீதியா மெட்ரிகுலேசன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆவார். இன்று சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் மாணவி ஹதிஜத் ரிஃப்தாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கி பாராட்டினார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பேச்சாற்றலை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. 5 சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் இவர் மாநில அளவில் முதலிடம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பான சாதனையை புரிந்த மாணவி ஹதிஜத் ரிஃப்தாவையும், அவருடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் ஆசிரிய பெருமக்களையும், பெற்றோரையும் கீழை நியூஸ் சார்பாக வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










இந்த அன்பு இளவலுக்கு மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
இறைவன் அருளால் வெற்றிகள் தொடரட்டும்.