தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி மு க பாக முகவர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது . இதில் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் ,மகளிரண செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வெற்றிக்கு பாக முகவர்களே முக்கிய காரணமாக விளங்குகின்றனர். 21 தொகுதி இடைத்தேர் வர வாய்ப்புள்ளது வருமா வரதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இடைத்தேர்தல் அல்ல பொதுத் தேர்தல் வர வேண்டும் அது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கலைஞருக்கு ஈடான தேர்தல் பணியை யாரும் ஆற்றிட முடியாது.
கிராமசபை கூட்டத்தை நான் தான் கண்டுபிடித்தேன் நாளைய முதல்வர் என ஒரு சிலர் கூறி வருகின்றனர் என கமலஹாசனை தாக்கி பேசினார் . நான் தனியாக கிராமத்திற்கு சென்றால் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் ஆனால் முதல்வர் எடப்பாடியை மக்களுக்கு அடையாளம் தெரியாது சேலம் எடப்பாடி பிலேயே அவரை தெரியாத மக்கள் உள்ளனர். தி மு க வாக்குச்சாவடி முகவர் ஒருவர் இருபது பேரை வாக்களிச்ச செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் அதிலேயே கட்சிக்கு ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்து விடும். தி மு க வேட்பாளர்களை ஆதரித்து திரையுலக நட்சத்திரங்கள் தலைமை கழக பேச்சாளர்கள் பிரச்சாரத்திற்கு வருவார்கள். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை திட்டமிட்ட சதி பொதுமக்கள் குறி பார்த்து பொதுமக்கள் சுடப்பட்டார்கள் அந்த ஆலையை மூடுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். ஜெயலலிதா உயிரிழப்பை விசாரணை செய்யும் ஆறுமுகசாமி கமிஷன் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று பேசினார்…


You must be logged in to post a comment.