ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புலிகளை துள்ளியமாக கணக்கெடுக்க இரவிலும் செயல்படக் கூடிய நவீன 300 கேமராக்கள் 150 இடங்களில் பொருத்தும் பணி துவங்கியது…

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புலிகளை துள்ளியமாக கணக்கெடுக்க இரவிலும் செயல்படக் கூடிய நவீன 300 கேமராக்கள் 150 இடங்களில் பொருத்தும் பணி துவங்கியது…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர் குறிப்பாக புலிகள், சிறுத்தைகள் ,கருஞ் சிறுத்தைகள், காட்டெருமைகள், மான்கள், யானைகள் என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றனர் அனைத்து விலங்குகளையும் ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

வனத்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வன விலங்குகளையும் கணக்கெடுத்தாலும் புலிகளை மட்டும் தனியாக கேமராக்கள் பொருத்தி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு முதல் இந்த பணி நடைபெற்று வருகிறது .அந்த வகையில் இந்த ஆண்டிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகள் எந்தெந்த பகுதியில் நடமாடி வருகிறது கடந்த ஆண்டு வைத்த கேமராக்களில் எந்த இடங்களில் புலிகள் அதிக அளவு பதிவானது என்பதையெல்லாம் ஆய்வு செய்த அதிகாரிகள் இந்த ஆண்டும் குறிப்பிட்ட இடங்களைத் தேர்வு செய்து வனத்துறையினரை கேமராக்களை பொருத்த முடிவு எடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் புலிகளை துல்லியமாக கணக்கிட நவீன கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி வருகின்றனர்.

இதற்காக சுமார் 300 கேமராக்கள் வரவழைக்கப்பட்டு 150 இடங்களில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!