விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தமிழக அரசின் சார்பில் 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 2 கண்மாய்கள் 19 ஊரணிகளை தூர்வாரும் குடிமராமத்து பணிகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைப்பு..
தமிழகத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்கள் உள்ளிட்டவைகளை தூர்வார தமிழக அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதிகளான அத்திக்குளம் கண்மாய், படிக்காசுவைத்தான்பட்டி கண்மாய் மற்றும் 19 ஊரணிகள்,கண்மாய்களின் கரைகள் சேதமடைந்தும், முட்செடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனை அடுத்து இந்த 2 கண்மாய்கள் 19 ஊரணிகளை தமிழக அரசின் சார்பில் சுமார் 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டியும் இனிப்புகள் வழங்கியும் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.