பாலக்காடு – திருச்செந்தூர் ரயிலுக்கு ஸ்ரீவைகுண்டம் நிறுத்தம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..

பாலக்காடு – திருச்செந்தூர் ரயிலுக்கு ஸ்ரீவைகுண்டம் நிறுத்தம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..

பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலுக்கு சோதனை அடிப்படையில் கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை ஸ்ரீவைகுண்டம் நிறுத்தம் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த ரயில் இரு மார்க்கத்திலும் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று சென்றது.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மேலும் 90 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 25ம் தேதி வரை இந்த ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும்.

வண்டி எண் 16731 பாலக்காடு – திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் :

வண்டி எண் 16732 திருச்செந்தூர் – பாலக்காடு ஸ்ரீவைகுண்டம் :

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!