மறக்கமுடியுமா ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் தீவிபத்து..62 பேர் பலியான நினைவு தினம் இன்று..

மறக்கமுடியுமா ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் தீவிபத்து..62 பேர் பலியான நினைவு தினம் இன்று..

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த ஆண்டு கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் பலியானதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த 2005 ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி குருராஜன், ஜெயஸ்ரீ ஆகியோரின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் கல்யாணத்தையொட்டி போடப்பட்டிருந்த பந்தல் தீப்பிடித்து அப்படியே விழுந்ததால் அதில் சிக்கி 62 பேர் பலியானார்கள்.அவர்களில் மணமகன் குருராஜனும் ஒருவர். 23 பெண்களும், 4 குழந்தைகளும் இந்த கோர தீவிபத்தில் சிக்கிக் கருகினர். 45 பேர்காயமடைந்தனர். மணமகள் ஜெயஸ்ரீ அதிர்ஷ்டவசமாக காயமின்றித் தப்பினார்.

தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து கல்யாண மண்டப உரிமையாளர், மேலாளர்,வீடியோகிராபர், லைட்பாய், எலக்ட்ரீஷியன், பந்தல் அமைப்பாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தீ விபத்தில் சிக்கித் தப்பிய ஜெயஸ்ரீ முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் மன நல ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!