இலங்கையில் முதன் முதலாக அருங்காட்சியகம் ஒன்று கடலுக்கடியில் இலங்கை கடற்படையினரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 அடி ஆழத்தில், கடற்படை வீரர்களால் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில், கான்கிரீட் மற்றும் எஃகால் ஆன பீரங்கி உள்ளிட்ட பண்டைய காலப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்படும் வருவாயை பெரிதும் சார்ந்துள்ள இலங்கையில், கொரோனா ஊரடங்கால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் வெளிநாட்டினர் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், டச்சு கோட்டையை காண காலே வரும் அனைவரும், நிச்சயம் இந்த அருங்காட்சியகத்தை கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அருகாட்சியகம் பிரபலமான சுற்றுலாத் தலமான காலி நகரின் கடற்கரையில் அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் ஒரு செயற்கை பவளப்பாறைகளாக உருவாக்கப்பட்டு, இப்பகுதியில் கடல் வாழ்வை மேம்படுத்துவதோடு, அருங்காட்சியகத்தின் அழகையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தித்தொகுப்பு அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.