ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் மூலம் இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோள் இன்று (பிப்.,17) விண்ணில் பாய்கிறது..

இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, ‘இன்சாட் – 3டிஎஸ்’ செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ.

இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.,17) மாலை, 5:30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட்.

ஏவுதளத்தில் ராக்கெட் தயாராக உள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் நேற்று துவங்கியது. இறுதிகட்ட பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!