இந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988)..
இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின்(DRDO) சார்பில் நாட்டின் பாதுகாப்புக்காக பிரித்வி ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிரித்வி ஏவுகணை தரையிரிருந்து தரைக்கு தாக்கும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியன் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.
பிரித்வி I 4400 Kg எடை கொண்டது.
நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1988ல் இதன் சோதனை வேலைகள் ௮ரம்பமாயின.
இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிருத்வி-1 ரக நடுத்தர ரக தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய திறன் படைத்த ஏவுகணை பிருத்வி-1.
ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஏவுகணை தளத்திலிருந்து பிருத்வி-1 வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
பிரித்வி II 4600 Kg எடை கொண்டது. நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996ல் ஆரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன.
பிருத்வி – 2 ஏவுகணை அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகில் உள்ள சண்டிப்பூரில் பிருத்வி-2 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. மொபைல் லாஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்டதும், திட்டமிட்டபடி பறந்து சென்று இலக்கை பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
ஏவுகணைத் தாக்குதலின் துல்லியத் தன்மை உள்பட அனைத்து செயல்பாடுகளும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு முகமையின் கண்காணிப்பு நிலையங்கள், ரேடார் சாதனங்கள் உள்ளிட்டவற்றால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே, பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை பிப்ரவரி 21-ம் தேதி நடத்தப்பட்டது. ஏவுகணை 2003-ம் ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
பிரித்வி III 5600 Kg எடை கொண்டது. நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.2004ல் இதன் சோதனை வேலைகள் ௮ரம்பமாயின.
இந்திய விஞ்ஞானிகள், மே 2008ல், ஏவுகணைகளின் இயங்கு தூரத்தை குறைந்தது 40% அதிகரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருப்பதாகக் கூறினர். ஏவுகணைகளின் மேல்பரப்பில் சிறப்பு உலோகப் பூச்சு பூசுவதன் மூலம், அவை வானில் பறக்கும்போது ஏற்படும் காற்றின் எதிர்விசையை எளிதாகக் குறைக்க முடியும் (7 – 8 மக் வேகத்தில் 47% குறைவு). இதன் மூலம் ஏவுகணைகளின் இயங்கு தூரத்தை கணிசமாக (குறைந்தது 40%) அதிகரிக்க முடியும். இத்தொழில்நுட்பம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அக்னி ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னி ஏவுகணை (சமஸ்கிருதம்: “நெருப்பு”) என்பது இந்தியாவினால் உருவாக்கப்பட்ட பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் பெயருடைய நடுத்தர தூரம் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வகைகளைக் குறிக்கும். அக்னி நீண்ட இயங்கு தூரம் கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று நிலத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்தைத் தாக்கும் ஏவுகணையாகும். அக்னி ஏவுகணைக் குடும்பத்தில் முதல் ஏவுகணையான அக்னி-1, ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு 1991-ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. அதன் வெற்றிக்குப் பிறகு அக்னி ஏவுகணையின் முக்கியத்துவம் கருதி அத்திட்டத்தில் இருந்து அக்னி ஏவுகணைத் திட்டம் பிரிக்கப்பட்டு ராணுவ பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்கி தனி திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இதுவரை இந்திய ராணுவத்தில் அக்னி-1, அக்னி-2, அக்னி-3,அக்னி-4, அக்னி-5, அக்னி-6, பிருத்வி-1, பிருத்வி-2, பிருத்வி-3 ஆகிய ஏவுகணைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









