திருவாடானை அருகே அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பால்குட உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள அரசூர் கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாசாணி அம்மன் திருக்கோவிலின் ஏழாம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மே 26 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தி வீதி உலா வந்தனர்.
விரதம் இருந்த பக்தர்கள் அரசூர் ஸ்ரீ ஆனந்த விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பால்குடம் ஊர்வலத்தின் போது சிறுவர், சிறுமியர், பெரியவர் என பலருக்கும் சாமி அருள் வந்து ஆடினர்.
பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.