மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கான குழு விபத்து காப்பீடு பதிவு செய்யப்பட்டது.தடகளம் ,கபடி வலைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டு வீரர்களும் 3156 பேருக்கு விபத்துக்குழு காப்பீடு வழங்கப்பட்டது
ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனர் விளையாட்டு ஆணைய முதல்வர் கிஷோர் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேசன் கூடை பந்தாட்ட தலைவர் ஆதவ் அர்ஜுன், கபடி விளையாட்டில் துரோணாச்சாரியா விருது பெற்ற பிரசாத் ராவ் , சமூக நல ஆர்வலர் ராமச்சந்திரன் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் விழாவிற்கு வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள தடகளம். கபடி , கூடைப்பந்து வலைப்பந்து, கோகோ உள்ளிட்ட அனைத்து பிரிவு விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.
மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவ கல்லூரி மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து அனைத்து வீரர்களுக்காக விபத்து குழு காப்பீடு வழங்கும் நிகழ்வு மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டனர்.
வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் விளையாட்டு வீரர்களிடம் பேசும் போது
வாய்ப்புகள் கிடைக்காது கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சில விளையாட்டு வீரர்கள் விளையாட்டுக்காக விளையாடுவார்கள் சிலர் ஜெயிப்பதற்காக விளையாடுவார்கள்.
வந்திருக்கின்ற விளையாட்டு வீரர்கள் எல்லாம் ஜெயிப்பதற்காக விளையாட வேண்டும்
இன்று உலக அளவில் விளையாட்டுப் பட்டியலில் நாலாவது நிலையில் இருக்கின்றோம் வரும் காலங்களில் சைனாவை மிஞ்சிவிடும் அளவிற்கு விளையாட்டு வீரர்கள் இருக்கின்றனர். இதற்காக மத்திய மாநில அரசுகள் விளையாட்டு வீரர்களுக்காக நிறைய பயிற்சிகள் வசதிகள் செய்து தருகின்றனர்
இவற்றை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் முன்பு நன்கு படித்தால் தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். ஆனால் தற்பொழுது விளையாட்டில் கூட உயர்ந்த நிலையை அடைய முடியும் உதாரணத்திற்கு பிரக்யானந்தா நமது பள்ளியில் படித்த மாணவர் இன்று உலக அளவில் செஸ்ஸில் மிகப் பிரபலமாக உள்ளார். செஸ் கிராண்ட் மாஸ்டர் 26 பேரில் 14 பேர் வேலம்மாள் பள்ளியில் படித்தவர்கள் கபடி என்பது மற்ற பணக்கார விளையாட்டுகள் போல் இல்லாமல் சாதாரண விளையாட்டு .
நமது பகுதியைச் சேர்ந்த மூவாயிரம் வீரர்கள் உள்ளீர்கள். எந்த கெட்ட பழக்க வழக்கத்திற்கும் ஈடுபட மாட்டார்கள் என நம்புகிறேன். நீங்கள் வாரத்தில் 7 நாட்கள் விளையாட வேண்டாம் ஐந்து நாட்கள் பள்ளிக்கு போனாலும் சரி மற்றதில் ஈடுபட்டாலும் சரி இரண்டு நாட்கள் கண்டிப்பாக விளையாட்டில் ஈடுபட வேண்டும். தினமும் காலை மாலை விளையாட்டில் பயிற்சியில் ஈடுபட வேண்டும் அப்பொழுதுதான் வெற்றி பெற முடியும். நீங்கள் ஜெயிப்பதற்காகவே விளையாட வேண்டும் எந்தத் துறையானாலும் முழுமூச்சுடன் ஈடுபட்டால் ஜெயிப்பது நிச்சயம் ஜெயிப்பதற்காக விளையாடுங்கள் என வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் கூறினார்
*அமைச்சர் மூர்த்தி பேசுகையில்:*
விளையாட்டு வீரர்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம் பள்ளி கல்லூரி மாணவர்களிடத்தில் போதைப் பழக்கம் தற்போது அதிகமாகி வருவதை திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் முதல்வர் அதை தடுத்து நிறுத்துவதற்கு முயற்ச்சி செய்து வருகிறார். விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் விரைவில் வழங்குவதற்கு அமைச்சர் உதயநிதி ஏற்பாடு செய்து வருகிறார். சிறுவயதில் நானும் ஒரு கபடி வீரர் தான் எனக்கு பிடித்த விளையாட்டு கபடி.
*தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.டி.ஆர் கூறுகையில்:*
கடந்த வாரம் பாத்திமா கல்லூரியில் நடைபெற்ற கபடி போட்டியில் கடைசி நிமிடங்கள் வரை 10 புள்ளிகள் பின்னிலையில் இருந்த பாத்திமா கல்லூரி இறுதியாக வெற்றி பெற்றதை கண்டு ரசித்தேன். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் சோலைராஜா ஆண்டுதோறும் கபடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்றார்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.