இந்தியாவில் இருந்து வேலை மற்றும் சுற்றுலாவுக்காக துபாய் மற்றும் இதர நாடுகளுக்கு செல்பவர்கள் “OKAY TO BOARD” என்ற அனுமதியை பயணத்திற்கு முன்பு பெற வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் இந்த நடைமுறையை தற்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தளர்த்தியுள்ளது. ஆனால் “ECR – EMIGRATION CHECK REQUIRED” பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்த நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த நடைமுறை ஏர் இந்தியா மற்றும் ஏர் அரேபியா போன்ற நிறுவனங்கள் சில வருடங்களுக்கு முன்னரே தளர்த்தியது குறிப்பிடதக்கது. இது பற்றி கீழக்கரை டிராவல்
ஜோன் எஸ்.கே.வி சேக் கூறியதாவது “நிச்சயமாக இந்த தகவல் மதுரை போன்ற ஊர்களில் இருந்து துபாய் செல்லும் பயணிகளுக்கு நிச்சயமாக சந்தோசம் தரக்கூடிய செய்தியாகவே இருக்கும் காரணம் எங்களுடைய அனுபவத்தில் பல பயணிகள் விமான நிலையம் வரை சென்று “OKAY TO BOARD” என்ற தகவல் அளிக்கப்படாததால் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கும் ஆளாகினார்கள்” என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











Very good no net okay bord