கீழக்கரை DSP அலுவலகம் அருகே வேகத் தடை அமைக்க கோரி ‘கீழக்கரை நகர் நல இயக்கம்’ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கீழக்கரையில் இருந்து ஏர்வாடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கீழக்கரை DSP அலுவலகம் அருகே இருக்கும் நான்கு வழி சாலை சந்திப்பில் நிரந்தர வேகத் தடை ஏதும் அமைப்படாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சாலையில் கடந்த காலங்களில் பல விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பஷீர் அஹமது கூறுகையில் ”இந்த சாலை போக்குவரத்து மிகுந்த பிரதான சாலையாக இருக்கிறது. 3000 க்கும் மேற்பட்ட தாஸீம் பீவி மகளீர் கல்லூரி மாணவ மாணவிகளும் மற்றும் பியர்ல் மெட்ரிகுலேஷன் பள்ளி சிறார்களும் இந்த பாதையை கடந்து தான் தினமும் தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர்.

மேலும் இந்த சாலையை கடந்து செல்லும் கண்டெய்னர் வாகனங்கள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதி வேகத்துடன் செல்வதால் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு வேகத் தடை உடனடியாக அமைக்க வேண்டும். தற்போது தற்காலிக வேகத் தடை மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக ஒரு நிரந்தரமான வேகத் தடை அமைப்பதோடு வேகத் தடை இருக்கிறது என்பதற்கான முன்னெச்சரிக்கை பலகையையும் இந்த பகுதியில் வைக்க வேண்டும்  இது சம்பந்தமாக நேற்று முன் தினம் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!