ராமநாதபுரத்தில் தனியர் மகாலில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் என் உயிரினும் மேலான.. கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத்ராஜா ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.. மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஜி.பி.ராஜா, இன்பா ஏ.என்.ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் விழா சிறப்புரையாற்றினார் இதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 225 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு கலைஞரின் சமூக நீதி, இடஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, உள்ளிட்ட நூற்றாண்டு சாதனைகள் குறித்து பேசினர்.பேச்சு போட்டியில், முனைவர் சபாவதி மோகன், அமுதரசன், மருத்துவர் யாழினி, வே.மதிவேதன், உமா, சூரியா,கிருணமூர்த்தி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். பேச்சு போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கு அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்;பாளர்கள் ரமேஸ் கண்ணா, குமரகுரு, சண். சம்பத்குமார், சத்தியேந்திரன், தௌபீக் ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோபிநாத் நன்றி கூறினார்.

You must be logged in to post a comment.