இராமநாதபுரம், ஆக.20- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் கணினி பயன்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் விஜயராஜ் பேசுகையில், கணினி அறிவியல் பாடங்களை நன்கு புரிந்து படிக்க வேண்டும். இப்பாடம் மட்டுமின்றி எந்த பாடம் என்றாலும் அதில் புரிதல் அவசியம். தகவல் தொழில்நுட்பத் துறை அதிவேகமாக வளர்ந்து வருவதால் கணினி அறிவியல் பட்டம் முடித்தோரின் தேவை அதிகரித்துள்ளது. கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு அரசு, தனியார் நிறுவனங்ளில் ஏராளமான வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கல்லூரி முதுகலை கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திக், இளமறிவியல் துறை தலைவர் காசிகுமார், தகவல் அறிவியல் தலைவர் பிரபாவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கணினி அறிவியல் துறையின் இலட்சினையை விஜயராஜ் வெளியிட, ராஜசேகர் பெற்றுக் கொண்டார்.


You must be logged in to post a comment.