கொரோனா நிவாரண நிதி பெறாத மாற்றுத்திறனாளிகள் நிவாரணம் பெற சிறப்பு முகாம்…

தமிழக அரசின் ஆணைப்படி, தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை அசல் வைத்துள்ள நபர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. பணம் வழங்கும் பட்டியலில் பெயர் இருந்தும், ஆனால் அடையாள அட்டை அசல் இல்லாத நபர்கள் இந்த நிவாரண தொகையை பெற முடியாத நிலை இருப்பதால், அவர்களுக்கு கீழ்கண்ட நாட்களில் அந்தந்த தாலுகா அலுவலகங்களில், மருத்துவர் மூலம் மருத்துவ சான்றிதழ் வழங்கி அதனடிப்படையில் அன்றைய தினமே நிவாரண தொகை வழங்க மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே தங்கள் பகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகங்களில், குறிப்பிட்ட தினத்தன்று தகுந்த முன்னேற்பாடுகளை செய்யும்படி இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகாம் நடைபெறும் ஊர்கள் மற்றும் நாட்கள்;-

27.07.2020 (திங்கள்) – இராமேஸ்வரம்,

28.07.2020 (செவ்வாய்)- கீழக்கரை ,

29.07.2020 ( புதன்) – கமுதி,

30.07.2020 ( வியாழன்) – கடலாடி,

31.07.2020 (வெள்ளி) – ஆர்.எஸ்.மங்களம்,

01.08.2020 (சனி) – திருவாடானை,

03.08.2020 (திங்கள்) – இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,

04.08.2020-( செவ்வாய்) – பரமக்குடி,

05.08.2020 ( புதன்) – முதுகுளத்தூர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!