இன்று (08.10.2018) மஹாளய அமாவாசையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அதிகாலை தொடங்கி புனித நீராடி வருகின்றனர். தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட்டனர். இதன் பின்னர் 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இது போல், சேதுக்கரை கடலில் தர்ப்பணம் செய்து விட்டு புனித நீராடியவர்கள் ஜெய் வீர ஆஞ்சநேயர் கோயில், தேவிபட்டினம் கடலில் தர்ப்பணம் செய்து புனித நீராடிய பின் கடலடைத்த பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.



You must be logged in to post a comment.