திருநெல்வேலி-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்..

சென்னை-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே மதுரை பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு வரும் ஏப்ரல் மாதம் 3,10,19,24 ஆகிய தேதிகளிலும் (புதன் கிழமை) மேலும் மே மாதம் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் 06003 என்ற எண் உடைய சிறப்பு கட்டண ரயில்கள் செல்கிறது. இந்த ரயிலானது மாலை 6.50 மணிக்கு சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு கிளம்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதேபோல் மறுமார்க்கமாக திருநெல்வேலி சென்னை இடையே வரும் ஏப்ரல் மாதம் 4,11,18,25 ஆகிய தேதிகளிலும் (வியாழன்கிழமை), மே மாதம் 2,9,23,30 ஆகிய தேதிகளில் 06004 என்ற எண்ணுடைய சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலானது மாலை 6.15 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து கிளம்பும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!